• Jul 26 2025

பிரபல நடிகையின் செல்போனுக்கு வந்து குவியும் ஆபாசப்படங்கள்; ஜிம் பயிற்சியாளரை தேடும் பொலிஸார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பெங்காலி மொழியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை பாயல் சர்க்கார்.இவர் ஏராளமான வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். மேலும் தேசிய கட்சியான பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார் . இந்நிலையில் இவர் ஜிம் பயிற்சியாளர் மீது பாலியல் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா காவல்துறையில் நடிகை பாயல் சர்க்கார் இந்த புகாரை அளித்துள்ளார். அதில் நீண்ட காலமாக தனக்கு தெரிந்த ஜிம் பயிற்சியாளரிடமிருந்து தனக்கு ஆட்சேபனைக்குரிய மெஸேஜ்கள் வருவதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். 


 அவரது புகாரின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதலில் ஆபாசமாக மெஸேஜ்களை அனுப்பிய அந்த நபர் பின்னர் ஆபாச படங்களையும் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது நம்பரை பிளாக் செய்த பிறகு வேறு ஒரு எண்ணில் இருந்து அந்த நபர் ஆபாச மெஸேஜ்களை அனுப்பியுள்ளார். 


இதனால் பயந்துபோன  பாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த நபர் பாயலுக்கு அனுப்பிய மெஸேஜ் ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார். அதில் அந்த நபர் பாயலுடன் நேரத்தை செலவிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதை உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிப்பேன் என்று பாயல் மிரட்டியபோது, அந்த நபர் தனது படங்களை போட்டோஷாப் செய்து சமூக ஊடகங்களில் வைரலாக்குவேன் என்று நடிகையை மிரட்டியுள்ளது தெரியவந்துள்ளது.


நடிகை பாயல் சர்க்காருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் இந்த நபர் ஜிம் பயிற்சியாளர் மட்டுமின்றி அவருக்கு தூரத்து உறவினராகவும் இருக்கின்றாராம்.மேலும் நடிகை பாயலுக்கு அவர் மாமா முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இருப்பினும் நடிகை பாயல் சர்க்காருக்கு இதுபோன்று ஆபாச மெஸேஜ்கள் வருவது இது முதல் முறையல்ல. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement