• Jul 25 2025

“கடமையே கண்கண்ட தெய்வம்” தாயின் இறுதிச்சடங்கு முடிந்தவுடனேயே படப்பிடிப்பு தளத்துக்கு பறந்த ‘லியோ’ பட பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது லியோ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் 67ஆவது படமான இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

லியோ பட ஷுட்டிங் காஷ்மீரில் நடந்து வருவதால் அங்கு எந்த பிரபலம் சென்றாலும் அவர்கள் அப்படத்தில் நடிப்பதாக தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன.அந்த வகையில் லெஜன்ட் திரைப்படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சரவணன் அவர்களும் அண்மையில் காஷ்மீருக்கு சென்றுள்ளார்.


இதனால் இவரும் இப்படத்தில் நடிக்கின்றாரா என்ற கேள்வி இன்றைய நாளில் எழுந்துள்ளது.இது ஒரு புறம் இருக்க லியோ படத்தின்  ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் தாயார் உடல்நலக்குறைவால் நேற்றை தினம் இறப்புக்குள்ளானார். இதனால் மனோஜ் சென்னை திரும்பியிருந்தார்.


இந்த நிலையில் தாயாரின் இறுதிச் சடங்கை முடித்தவுடன் மீண்டும் இன்றைய தினம் காஷ்மீருக்கே சென்று விட்டாராம். அத்தோடு தன்னுடைய பிரச்சினைகளால் படப்பிடிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்த முடிவை எடுத்தாராம். இதனால் இவருக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்தாலும் பொறுப்புக்களை சரியாக செய்து வருவதாகவும் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


















Advertisement

Advertisement