• Jul 25 2025

காதலில் விழுந்த பிரபாஸ்... விரைவில் திருமணமா... திடீர் அறிக்கை வெளியிட்ட நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய சிறந்த நடிப்பால் பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட ஒருவரே நடிகர் பிரபாஸ். அதிலும் இவர் நடிப்பில் உருவான 'பாகுபலி' படம் யாராலும் மறக்க முடியாது.

அப்படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி கெமிஸ்டிரி பக்காவாக ஒர்க் அவுட்டாகி இருந்தது. அந்த நேரத்தில் இருந்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது.


இந்நிலையில் தற்போது பிரபாஸ் 'ஆதிபுருஷ்' என்ற படத்தில் ராமராக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் சமீபத்தில் தான் இப்படத்தினுடைய டீசர் வெளியாகி இருந்தது. 


இதனைத் தொடர்ந்து ஆதிபுருஷ் திரைப்படத்தின் ப்ரோமோனில் கலந்து கொண்ட க்ரித்தி சனோன், கரண் ஜோஹரிடம் பேசும்போது, பிரபாஸுடன் டேட்டிங் செய்வதை சூசகமாக தெரிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் படு வைரலானது. அதுமட்டுமல்லாது பல இணையதளங்கள் அவர்களின் திருமண தேதியை ஊகிக்கத் தொடங்கின. 


இவ்வாறாக நடிகை க்ரித்தி சனோன் பற்றியும், பிரபாஸ் பற்றியும் இணையத்தில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ரித்தி சனோன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில் "இது பியாரோ அல்லது PRயோ அல்ல.. எங்கள் பேட்டி ஒன்று ரியாலிட்டி ஷோவில் கொஞ்சம் அதிகமாகவே சென்றுவிட்டது. அவரது வேடிக்கையான, கேலியான கேள்வி வதந்திகளுக்கு வழிவகுத்துவிட்டது. சில ஊடகங்கள் எனது திருமண தேதியை அறிவிக்கும் முன் நான் சொல்லியே ஆகவேண்டும். அவை முற்றிலும் வதந்திகள், ஆதாரமற்றவை, போலியான செய்தி" எனப் பதிவிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Advertisement

Advertisement