• Jul 24 2025

தன்னுடைய டான்ஸ் டீமுடன் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபு தேவா- ட்ரெண்டாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ஆர் ஆர் ஆர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நாயகர்களாக நடித்திருந்த இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார்.

 இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட்டாகின. குறிப்பாக ஆர்ஆர்ஆர் படத்திற்காக கால பைரவா மற்றும் ராகுல் இணைந்து பாடிய நாட்டு நாட்டு என்கிற குத்து பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. 


முதலில் கோல்டன் குளோப் விருதை வென்ற இப்பாடல் சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவிலும் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் விருது வென்று அசத்தியது. இதன்மூலம் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய பாடல் என்கிற பெருமையும் நாட்டு நாட்டு நாட்டு பாடல் பெற்றது. 

இதனை அடுத்து இப்பாடலுக்கு அனைவரும் நடனமாடி வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் நடனமாடி வருகின்றார்கள்இ அந்த வகையில் நடிகர் பிரபு தேவா தன்னுடைய டான்ஸ் டீமுடன் இணைந்து ஆடியுள்ளதோடு அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement