• Jul 25 2025

பிரபு தேவா அப்படி செய்ததால் என் மனதில் காயம் ஏற்பட்டது.. நீண்டநாள் ரகசியத்தை போட்டுடைத்த மதுபாலா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் குறிப்பாக 1990-களில் முன்னணி கதாநாயகியாகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மதுபாலா. இவர் 'அழகன், வானமே எல்லை, ரோஜா, ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ' உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 


தமிழில் மட்டுமல்லாது இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது குணசித்திர வேடங்களில் அதிகளவில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சினிமா வாழ்க்கை அனுபவங்களை மலரும் நினைவுகளாக மதுபாலா பகிர்ந்துள்ளார். 


அவர் அளித்துள்ள பேட்டியில் கூறுகையில் ''அந்த காலத்தில் திருமணமான நடிகைகளால் நடிக்க முடியாது. இப்போது திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கிறார்கள். நான் ஹேமமாலினியை பார்த்தே நடிகையாக விரும்பினேன். பாலசந்தர், மணிரத்னம் மூலம் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து" எனத் தெரிவித்துள்ளார். 

அத்தோடு "பிரபுதேவா மிஸ்டர் ரோமியோ படத்தில் ஒரு பாடல் காட்சியை எடுத்தபோது என்னால் அவரோடு நடனம் ஆட முடியாது என்று கருதி உதவியாளர்களிடம் எனக்கு பயிற்சி கொடுக்க சொல்லி விட்டு அரங்கை விட்டு போய் விட்டார். சுமார் 2 மணிநேரம் எனக்கு பயிற்சி கொடுத்து அதன்பிறகு பாடலை படமாக்கினர்.


மேலும் எனக்கு அந்த சம்பவம் ஈகோவை ஏற்படுத்தியது. எனக்கு நடனம் வராதா? பயிற்சி கொடுக்க சொல்லி விட்டு இப்படிப் போய் விட்டாரே? பயிற்சி எடுத்தால்தான் இவரோடு ஆட முடியுமா? என்றெல்லாம் எண்ணங்கள் வந்தன. என்னோடு அவருடன் போட்டி போட முடியாதுதான். 

ஆனாலும் அந்த சம்பவம் என் மனதை மிகவும் காயப்படுத்தியது. பெண்கள் அடிபணிவது வேறு. விட்டுகொடுப்பது வேறு. எதில் விட்டு கொடுக்கிறோம் என்பது முக்கியம்'' எனக் கூறியிருக்கின்றார். இவ்வாறு இவர் கூறியிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement