• Jul 24 2025

பாரதி கண்ணம்மா இந்த பிரபல சீரியலை காப்பி அடிக்கிறதா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடியும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். அது முடிந்தாலும் அடுத்த சீசன் தொடங்கும் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது, ஆனால் அது பற்றி எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வரவில்லை.

மேலும் பாரதிக்கு கண்ணம்மா பற்றிய உண்மை என்ன என்பது டிஎன்ஏ ரிசல்ட் மூலமாக தெரியவந்துவிட்டது. இருப்பினும் கதை இன்னும் முடியாமல் இழுத்துக்கொண்டே செல்கிறார் இயக்குநர்.

பாரதி உடன் வர முடியாதென கூறிவிட்டு இரண்டு மகள்கள் உடன் தனியாகவே சென்றுவிடுகின்றார்.


கண்ணம்மாவை எப்படியாவது அழைத்துவந்துவிட வேண்டுமென பாரதி குடும்பத்திடம் சொல்கிறார். அதே நேரத்தில் கண்ணம்மா மற்றொரு திட்டம் போடுகிறார். யாரும் கண்டுபிடிக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிடலாம் என கண்ணம்மா கூற, மகள்களும் அதை ஒப்புக்கொண்டு அதை செய்கின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த பூவே கதை போல மாறுகிறது பாரதி கண்ணம்மா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அந்த தொடரிலும் இதே போன்ற சூழ்நிலையில் ஹீரோயினின் ஊருக்கு சென்று உண்மையை சொல்லாமல் வேறு வேலை செய்து கொண்டிருப்பார் ஹீரோ. பாரதி கண்ணம்மாவிலும் கதை அதே போல மாறி இருப்பது விமர்சனத்திற்க்கு உள்ளாகி வருகின்றது.


Advertisement

Advertisement