• Jul 26 2025

திடீரென மேடையில் கண்கலங்கி அழுத தொகுப்பாளர் விஜய்...எல்லாம் அந்த ஒற்றை பெண் தான் காரணமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியாளர்களும் தற்போது பெரிய செலிபிரட்டியாக திகழ்ந்து வருகின்றனர்.

இதில் நடிகை, சினேகா, சங்கீதா, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடுவராக இருந்து வருகிறார்கள்.

நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ்-ன் இறுதி சுற்று  சூப்பராக நடைபெற்று கொண்டு இருந்தது.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாண்டி றியோ என பல முக்கிய நட்சத்திரங்கள் விருந்தினராக கலந்து கொண்டனர்.

இவ்வாறுஇருக்கையில் இதில் தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் தான் விஜய்.

இந்நிலையில் இவர் தாய் தந்தை பிரிந்து இருக்கும் குழந்தைக்கு உதவி செய்து வருகின்றார்.இதனை யாருக்கும் கூறாத நிலையில் அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டது DJD .

அந்த தருணம் அந்த பிள்ளை விஜய்யை பார்த்து நான் அவரை அண்ணனாக நினைக்கவில்லை அப்பாவாக தான் நினைக்கிறேன்.அவரை நேரில் காண ஆசை  எனக் கூறியதும் எமோஷ்னல் ஆகி கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விடுகின்றார் விஜய்.அத்தோடு ஒரு பிள்ளைக்கு மட்டுமே உதவி செய்யும் நிலை மட்டுமே உள்ளது.என்னும் 100 பிள்ளைகளுக்கு உதவி செய்யனும் எனக் கூறி இருந்தார்.

இதை பார்த்தும் இவர் செய்த உதவியை பார்த்தும் ரசிகர்கள் பலரும் தமது ஆதரவை சமூகவலைத்தளங்கள் மூலம் பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

Advertisement