• Jul 26 2025

அரசியல் கலந்தால் இது தான் நடக்கும்.. கடுமையாக தாக்கி பேசிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 63 நாட்களை கடந்து  மிகவும் விறுவிறுப்பாக  சென்றுகொண்டிருக்கிறது. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு இந்த சீசனில் சுவாரஸ்யம் சுத்தமாக இல்லை என்கிற கமெண்ட்  உம் தற்போது பரவி வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில்  அரசியல்வாதியான விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் அவரது கட்சியின் கொள்கைகளை பற்றிபேசுகிறார்.மேலும்  அதை மற்றவர்கள் கேள்வி கேட்டால் 'நான் அரசியல்வாதி, அதை பேசுவேன்' என கூறுகிறார்.

ஆனால் மற்ற நேரங்களில் இவரை மற்ற போட்டியாளர்கள் 'அரசியல்வாதி' என குறிப்பிட்டால்.. அப்படி சொல்லக்கூடாது என வாக்குவாதத்தில் இறங்குகிறார். சமீபத்தில் நடந்த சண்டையில் மணிகண்டன் கூட விக்ரமனிடம் இதை பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 4ம் சீசனில் பைனல் வரை வந்த பாலாஜி முருகதாஸ் தற்போதைய சீசன் பற்றி விமர்சித்து உள்ளார். அவர் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் டைட்டில் ஜெயித்தது குறிப்பிடத்தக்கது.

"பொழுதுபோக்குடன் அரசியல் கலந்தால் இப்படித்தான் பொதுமக்களுக்கு disaster ஆக இருக்கும்" என ஒரு பதிவு பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் விக்ரமனை தான் இப்படி தாக்கி பேசி இருக்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள். அது மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலே அரசியல் கட்சி நடத்தி வருகிறார் என்பது பாலாஜிக்கு தெரியாதா எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  



Advertisement

Advertisement