• Jul 24 2025

''பிரின்ஸ்'' படம் தோல்வி...அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு! இது தான் மாஸ்டர் பிளானா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் அதிதி சங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ள இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க இருக்கும் இவர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவர இருக்கிறது.ஆனால் அதற்கு முன்பாகவே இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த ஒரு விஷயம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. என்னவென்றால் டாக்டர், டான் போன்ற திரைப்படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது. அதுக்கேற்றார் போல் அவர் தன்னுடைய சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தினார்.

அந்த வகையில் அவர் இப்போது ஒரு படத்திற்காக 35 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். இப்படி குறுகிய காலத்திலேயே ஏறு முகத்தில் சென்ற சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் திரைப்படம் மரண அடியை கொடுத்தது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விளம்பரம் செய்யப்பட்ட அப்படம் கடும் விமர்சனங்களை பெற்றது. இதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் ஆட்டம் காண ஆரம்பித்தது

.இதனால் சுதாரித்து கொண்ட அவர் தற்போது தன் சம்பளத்தை கணிசமாக குறைத்து அதிரடி காட்டியுள்ளார். அந்த வகையில் தற்போது அவர் ஐந்து கோடி வரை தன் சம்பளத்தை குறைத்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னணி பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்களை எல்லாம் ஓரம் கட்டும் அளவிற்கு டாப் கியரில் சென்ற சிவகார்த்திகேயன் தற்போது இந்த அளவுக்கு இறங்கியுள்ளார்.எது எப்படியோ இவருடைய இந்த அதிரடி முடிவால் தயாரிப்பாளர் உற்சாகத்தில் இருக்கிறார்.

Advertisement

Advertisement