• Jul 25 2025

பவர் ஸ்டாருக்கு நேர்ந்த சோகம்.. சொத்துக்காக கடத்திய கும்பல்.. அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

காமெடி நடிகரான பவர் ஸ்டார் தற்போது 'பிக்கப் ட்ராப்' என்ற படத்தில் வனிதா விஜயகுமாருடன் இணைந்து நடித்து வருகின்றார். சமீபத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் தற்போது உடல்நலம் தேறி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி இணையத்தில் படு வைரலாகி வருகிறது. மேலும் இந்த பேட்டியை வனிதா விஜயகுமார் தான் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதில் பவர் ஸ்டார் பேசுகையில் "மதுரையில் பிரபலமான அக்கு பஞ்சர் டாக்டராக பணியாற்றி கொண்டிருந்த போது, நம்மோட வாழ்க்கை ஒரு வட்டத்துக்குள்ளே சுருங்குகிறது. இன்னும் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையோடு சென்னை வந்தேன். அங்கு வந்த பிறகு ஒரு படத்திற்கு பைனான்ஸ் செய்தேன். அப்போது தான் நானே நடித்தால் என்ன என்ற யோசனையுடன் படம் ஒன்றில் நடித்தேன். அந்த படம் தான் 'லத்திகா'" என்றார்.


மேலும் இந்தப்படத்தை திரையரங்கு ஒன்றில் 360 நாட்கள் ஓட வைப்பதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார் நடிகர் பவர் ஸ்டார். இந்தப்படத்திற்கு பிறகு நீங்க நிறைய பப்ளிசிட்டி பண்றீங்க எனக்கூறி, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடிக்கும் வாய்ப்பை சந்தானம் வழங்கியுள்ளார். பணம் இருந்த சமயத்தில் தன்னுடன் பலரும் சுற்றிய போது, தனக்கு பின்னாலும் நாலு பேர் இருக்கிறார்கள் என சந்தோஷப்பட்டதாகவும், ஆனால் பணம் போன பிறகு அவர்கள் தன் பக்கம் திரும்ப வராதது குறித்தும் அப்பேட்டியில் பேசியுள்ளார்.


அதுமட்டுமல்லாது இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, ஒருநாள் படம் பற்றி பேசுவதற்காக ஹோட்டல் ஒன்றுக்கு வர சொல்லி ஒரு கும்பல் தன்னை கடத்தி சென்றதாக பகீர் தகவல் ஒன்றினையும் கூறியுள்ளார். அதாவது தன்னுடைய சொந்தம் ஒன்றே சொத்துக்காக இந்த கடத்தலை நடத்தியதாக கூறி அவர் அதிர்ச்சி அளித்துள்ளார். பவர் ஸ்டாரின் இந்த பேட்டி ஆனது தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement