• Jul 25 2025

வெறும் 3படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும்... கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிரியங்கா மோகன்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'டாக்டர்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக முதன் முதலில் அறிமுகமானவர்.


அறிமுகப் படத்திலேயே தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையினால் இப்படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தில் நடித்திருந்தார்.


இவரது திறமையினால் தொடர்ந்தும் பல பட வாய்ப்புக்கள் வந்து குவியத் தொடங்கின. அந்தவகையில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'டான்' படத்தில் நடித்திருந்தார் பிரியங்கா மோகன். இவ்வாறாக மூன்று திரைப்படத்திலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார்.


அடுத்ததாக தற்போது தனுஷின் 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதே போல் ஜெயம் ரவி நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலலும் பிரியங்கா தான் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளாராம்.


இந்நிலையில் கோலிவுட் திரையுலகின் பிசியான கதாநாயகிகளில் ஒருவராக மாறி இருக்கும் பிரியங்கா மோகன் தற்போது ஒரு படத்திற்கு ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இவ்வாறாக குறுகிய காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்திருந்தாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையான சம்பளத்தை பிரியங்கா மோகன் வாங்கி வருகிறார் என்பது பாராட்டத்தக்க ஒரு விடயமாகும். 

Advertisement

Advertisement