• Jul 24 2025

இந்த கேரக்டரில் நடிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா; மனம் திறந்து பேசிய வரலட்சுமி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகனாக திகழ்ந்து வந்த நடிகர் சரத்குமாரின் மகளே வரலட்சுமி. இவர் தமிழில் 'போடா போடி' என்ற படத்தின் வாயிலாக அறிமுகமாகி உள்ளார். பின்னர் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த இவருக்கு தற்போது பட வாய்ப்புக்கள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.


அந்தளவிற்கு பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். ஆரம்பத்தில் ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்த இவர் சமீபகாலமாக வில்லி வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆனதையொட்டி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.


வரலட்சுமி அளித்துள்ள அப்பேட்டியில் ''நான் சினிமா துறைக்கு வந்து பத்து ஆண்டுகளில் 45 படங்களில் நடித்திருக்கிறேன். அதிலும் எனது வில்லி வேடத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது. வில்லி வேடங்களில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். ஆனாலும் அதில் என்னால் நடிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறேன்" எனக் கூறி இருக்கின்றார். 


மேலும் "எனது 10 வருட சினிமா பயணம் சுலபமாக இல்லை. எத்தனையோ எதிர்ப்புகள், நிராகரிப்புகளை பல வகையிலும் எதிர்கொண்டேன். ஆனாலும் நிறைய நல்ல விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். அத்தோடு கடினமாக உழைத்தேன், முயற்சியை கைவிடவில்லை.

இப்போது திரும்பி பார்க்கும்போது 45 படங்களில் நடித்து விட்டேனா என்ற பெருமை வருகிறது. எனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த பல பட வாய்ப்புகள் கிடைத்தன. ஓய்வில்லாமல் நடித்து வருவதால் மிகவும் பிஸியாக போகிறது சினிமா வாழ்க்கை. நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன்" எனக் கூறியிருக்கின்றார்.

Advertisement

Advertisement