• Jul 23 2025

பாவனாவின் கேரியரை நாசமாக்கிய பிரியங்கா... அவரே கூறிய தகவல்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வந்தவர் பாவனா பாலகிருஷ்ணன். அதிலும் இவர் மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்காவுடன் இணைந்து வழங்கிய நிகழ்ச்சிகள் யாவும் இன்றும் பலராலும் மறக்க முடியாது. 


இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மற்றும்  கிரிக்கெட் நிகழ்ச்சிகளுக்கு வர்ணனையாளராக பணியாற்றுவது என தன்னுடைய திறமையை பல வழிகளிலும் வெளிப்படுத்தி வருகின்றார். அத்தோடு சிறந்த பரத நாட்டிய கலைஞராகவும் விளங்கி வருகின்றார்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பாவனாவிடம் ஏன் விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் இப்போது தொகுத்து வழங்குவதில்லை என்று கேட்டனர். இதற்கு பாவனா பதிலளிக்கையில் எல்லாமே நன்றாக போய் கொண்டு இருந்தது. ஆனால் அந்த anchor வந்த பிறகு என் கேரியர் காலியானது என்று மறைமுகமாக பிரியங்காவை சுட்டிக் காட்டிக் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement