• Jul 24 2025

பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான ஞாபக மறதி- குடும்பத்தை காப்பாற்ற இது தான் வழி- திட்டித் தீர்த்த டெலிபோன் ராஜ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் காமெடி வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் பயில்வான் ரங்கநாதன் .இவர் சமீபகாலமாக நடிகர், நடிகைகள், கலைஞர்கள் என ஒருவரை விடாமல் ஏடாகூடமாக கேள்விகளை கேட்டு விமர்சித்து வருகின்றார்.

 அந்த வகையில் அண்மையில் பிசாசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதன், நீங்கள் பிசாசு என்பதால்தான் கருப்பு உடையில் வந்திருக்கிறீர்களா என பாலாவிடம் வாயை விட, அதற்கு பாலாவோ பிசாசு என்றால் கருப்பு சட்டை போட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பிங்க் கலர் சட்டைக்கூட போட்டிருக்கலாம் என தனக்கேயுரிய பாணியில் பதிலடி கொடுத்தார். அந்த விழாவின்போது பயில்வான் ரங்கநாதன் பிங்க் கலர் சட்டை போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..


சூழல் இப்படி இருக்க பட விழா ஒன்றில் சமீபத்தில் கலந்துகொண்ட கே.ராஜனிடம் வில்லங்கமான கேள்வியை பயில்வான் ரங்கநாதன் கேட்க, கோபமான ராஜன் மேடையில் வைத்தே கடுமையாக திட்டினார். இவ்வளவு பட்ட பிறகும் தனது அவதூறு பேச்சை பயில்வான் ரங்கநாதன் நிறுத்துவதாக இல்லை. தொடர்ந்து அவ்வாறு வீடியோக்களில் பேசிவருகிறார்.


இந்நிலையில் வடிவேலுவுடன் பல காமெடி காட்சிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகர் டெலிபோன் ராஜ் பயில்வான் ரங்கநாதனை காட்டமாக விமர்சித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "பயில்வான் ரங்கநாதனால் நிற்கக்கூட முடியாது. கண்களில் இருந்து நீராக வழியும். ஒரு வசனம் கொடுத்தால் அதை அவரால் சொல்ல முடியாது. ஞாபக மறதியும் அவருக்கு இருக்கிறது. எனவே தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் அல்லவா. இதற்காகத்தான் யூடியூப் சேனலில் இப்படி பேசி வருகின்றார் எனபதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement