• Jul 24 2025

'நீங்க சிங்கிளா இல்ல மிங்கிளா' ஓப்பனாக கேட்ட பிரியங்கா... அசராமல் அஸ்வின் அளித்த பதில்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஸ்வின் குமார். அந்தவகையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் மூலமே முதன்முதலில் திரையில் தோன்றினார். 


இதனைத் தொடர்ந்து பின்பு 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவ்வாறாக சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் கதாநாயகனாக தோன்றி இருக்கின்றார். அதாவது இவர் நடிப்பில் 'என்ன சொல்ல போகிறாய்' எனும் திரைப்படம் வெளிவந்தது.


இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவர் பேசிய ஒரு சில விஷயங்கள் பெரும் சர்ச்சையில் சிக்கியது. இதன்பின் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செம்பி 'எனும் திரைப்படம் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அஸ்வின் நடித்துள்ளார்.


இப்படத்தின் உடைய ப்ரோமோஷனுக்காக அண்மையில் விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அஸ்வின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா அஸ்வினிடம் 'நீங்க சிங்கிளா இல்லை மிங்கிலா" என ஓப்பனாக கேள்வி கேட்டார். இதற்க்கு பதிலளித்த அஸ்வின் 'நான் சிங்கிள் தான்' என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement