• Jul 24 2025

பணமோசடி வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்ட producer-ravindar- அதிர்ச்சியில் நடிகை மகாலட்சுமி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல டி.வி. நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டு சமூக வலை தளங்களில் பிரபலமானவர் தயாரிப்பாளர் ரவீந்தர்.முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்னன்னு தெரியுமா?, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இது தவிர பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும் அதிகமாகப் பேசி பிரபல்யமனவர். சமீபத்தில் தங்களுடைய முதலாவது திருமண நாளையும் சிறப்பாகக் கொண்டாடியிருந்தார்கள்.


இந்நிலையில் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த கைது செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவர் விரைவில் வெளியில் வரவேண்டும் என்று ரசிகர்கள் தமது ஆறுதலை மஹாலக்ஷ்மிக்கு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement