• Jul 23 2025

Superstar முன்னாடி கைகட்டி நின்னுட்டு.. இப்போ எதிர்த்து நிற்கின்றாரா?- விஜய்யை மோசமாகத் திட்டிய பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. வசூலில் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

எதிர்பார்த்ததை விட ஜெயிலர் படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகருமான மீசை ராஜேந்திரன் அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் கூறியதாவது 


விஜய் பெரியாரைப் படிங்க, அம்பேத்கரைப் படியுங்க என்று சொன்னாரு, இதெல்லாம் முதல்ல உங்களுக்கு  முதல் சொல்லத் தெரியாதா?, தளபதி என்று அரசியிலில் ஒருவர் இருக்கிறார். அப்பிறம் இவருக்கு எதுக்கு தளபதி என்று பட்டம் என்று கேட்டு விளாசியுள்ளார்..


மேலும் விஜய்யின் விஷ்ணு படத்திற்கு பூஜை போட்ட போது விஜய்யே ரஜினியின் கார் கதவை திறந்து அவரை வரவேற்று அவருக்கு முன்னாடி கையைக் கட்டி நின்றாரு.இப்போ அவருக்கு முன்னாடியே வந்து நின்று போட்டி போடுவேன் என்றால் என்ன அர்த்தம். அவரைப் பின்பற்றி தானே வாறீங்க பின்னர் அவருடைய பட்டத்தை பறிக்க ஆசைப்படுவது நியாயமா என்று விளாசித் தள்ளியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement