• Jul 23 2025

5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் காட் வழங்கிய தயாரிப்பாளர் சங்கம்- யார் யாருக்கு தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் விதமாக பல்வேறு சங்கங்கள் தொழிற்பட்டு வருகின்றன.அதிலும் முக்கியமான சங்கம் தான் தயாரிப்பாளர் சங்கர். அந்த சங்கம் அண்மையில் பிரபல முன்னணி நடிகர்களுக்கு ரெட் காட் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு தேதி கொடுக்காமல் இருப்பது உள்ளிட்ட பல புகார்கள் வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.சிம்பு, விஷால், அதர்வா, யோகி பாபு, எஸ்.ஜெ.சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.


நடிகர்கள் நோட்டீஸுக்கு பிறகும் இதை தொடர்ந்தால் அவர்கள் உடன் இனி எந்த தயாரிப்பாளரும் பணியாற்ற கூடாது என முடிவெடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் தியேட்டர் வாசலில் எடுக்கப்படும் விமர்சனங்கள் மூன்று நாட்களுக்கு பிறகு தான் வரவேண்டும் எனவும் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.


அத்தோடு அந்த விமர்சனங்களால் தயாரிப்பாளர் ஒரு ஆள் மட்டும் தான் அதிகம் நஷ்டம் அடைகிறார் எனவும் கூறி இருக்கின்றனர்.மேலும் தியேட்டர் வாசலில் எடுக்கப்படும் விமர்சனங்கள் மூன்று நாட்களுக்கு பிறகு தான் வரவேண்டும் எனவும் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது என்றும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement