• Jul 25 2025

'பகாசுரன்' மோகன் ஜி- க்கு தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...என்ன தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார். நட்டி, ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

சமூக வலைத் தளங்களில் அதிகம் பிரபலமாக உள்ள லயா, பகாசூரன் திரைப்படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி உள்ளார்.சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாரூக் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் தற்போது ரசிகர்ளுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் அவர்கள் இயக்குநர் மோகன் ஜி-க்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கியதோடு படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இவர்களுடன் நடிகர் ரிஷி ரிச்சர்ட் அவர்களுடன் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.  இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.





Advertisement

Advertisement