• Jul 24 2025

''டே நீ பொண்ணுங்களோட ரொம்ப விளையாடுற''... குக் வித் கோமாளி புகழை மிரட்டிய ஹன்சிகா

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சி என்றாலே பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது. பிக்பாஸ், சீரியல், குக் வித் கோமாளி, ஊ சொல்றியா ஊஊ சொல்றியா, அண்டாகாகசம், சூப்பர் சிங்கர் என்று ஏராளமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. 

அதில் சமையல் நிகழ்ச்சியை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருவது என்னவோ குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இந்நிகழ்ச்சி 4ஆவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.

வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியின் 2ஆவது வாரத்தில் கிஷோர் ராஜ்குமார் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்பதால், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தீவிரமாக சமையலில் இறங்கவுள்ளார்.

இந்த நிலையில், இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்கு ஹன்சிகா மோத்வானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். ஆம், இது தொடர்பான வீடியோவை டிஸ்னி+ஹாட்ஸ்டார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் இந்த நிகழ்ச்சியை நான் ரீல்ஸாக பார்க்கிறேன். புகழைப் பார்த்து டே நீ பொண்ணுங்களோட ரொம்ப விளையாடுற, உனக்கு கல்யாணம் ஆயிருச்சுல என்று மிரட்டும் தோணியில் பேசியுள்ளார்.

ஹன்சிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement