• Jul 25 2025

“லியோ” படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ள முக்கிய பிரபலங்கள்; ஆர்வத்தில் ரசிகர்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’லியோ’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அத்துடன் 12 டிகிரி குளிரில் கூட திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.

விஜய் மற்றும் த்ரிஷா ஆகிய இருவருக்கும் ஒரு சின்ன பிரேக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இருவரும் சென்னை திரும்பி உள்ளதாகவும் இருப்பினும் கௌதம் மேனன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்டோர் இன்னும் காஷ்மீர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு மிஷ்கின் சென்னை திரும்பிய நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் கௌதம் மேனனும் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

 

இதனை அடுத்து ’லியோ’ படப்பிடிப்பில் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் சஞ்சய்தத் ஆகிய இருவரும் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் ’லியோ’ படப்படிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் விஜய்யுடன் இவர்கள் இருவரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement