• Jul 24 2025

எதிர்பாராமல் நிகழ்ந்த பிரபலத்தின் சந்திப்பு!- ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த சர்ப்ரைஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டம்மிப் பட்டாசு என்னம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் ரம்யா பாண்டியன்.இதனைத் தொடர்ந்து இவர்  கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஜோக்கர் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.இந்த படத்திற்கு பின்னர் கதைத்தேர்வு சரியாக இல்லாததால், சில தோல்விப்படங்களால் துவண்டார்.

தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபல்யமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்  ஃபுல் ஃபாமில் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் நடித்து ஒடிட்டியில் வெளியான 'ராமே ஆண்டாளும் ராவணே ஆண்டாளும்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


இதை தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மாமூட்டிக்கு ஜோடியாக, ரம்யா பாண்டியன் நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இவரின் கைவசம் இடும்பன்காரி உள்ளிட்ட சில படங்கள் உள்ளது.


திரையுலகில் படு பிசியாக இயங்கி வரும், ரம்யா பாண்டியன் ஷூட்டிங் செல்வதற்காக ஏர்போர்ட் வந்த போது, அங்கு எதிர்பாராத விதமாக இயக்குநர் பாரதி ராஜாவை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் பேசி மகிழ்ந்த தருணம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போட்டு, சில புகைப்படங்களையும் வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


இந்த படத்திவில், இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநரான பாரதிராஜா சாருடன் பயணம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. பல கேள்விகளைக் கொண்டிருந்த ஒரு குழந்தைக்கு, எல்லா பதில்களையும் வழங்கிய வழிகாட்டி - உண்மையிலேயே ஒரு அற்புதமான பயணம். விலைமதிக்க முடியாத தகவல்களுக்கும் அன்பான வாழ்த்துகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement