• Jul 25 2025

திடீரென இலங்கைக்கு விசிட்டடித்த ரச்சிதா- வைரலாகும் வீடியோ- எந்த ஊரில் இருக்கிறார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பெங்களூரை சேர்ந்த ரச்சிதா மஹாலக்ஷ்மி அறிமுகமானது, கன்னட சீரியலாக இருந்தாலும் இவரை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது என்னவோ தமிழ் சீரியல்கள் தான். விஜய் டிவி தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்றான 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் நடித்த ரச்சிதா மஹாலக்ஷ்மி, பின்னர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2013 ஆம் ஆண்டு தினேஷை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்திற்கு பிறகும்... இளவரசி, சரவணன் மீனாட்சி சீசன் 2, சரவணன் மீனாட்சி சீசன் 3, நாம் இருவர் நமக்கிருவர் சீசன் 2, புது புது அர்த்தங்கள், சத்யா சீசன் 2 போன்ற பல சீரியல்களில் நடித்தார். இவர் நடித்த சரவணன் மீனாட்சி சீரியலை பார்த்து விட்டு இயக்குநர் ராதா மோகன் தான் இயக்கிய 'உப்பு கருவாடு' படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் வழங்கினார்


இதை தொடர்ந்து,  கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கலந்து கொண்டு விளையாடினார் ரச்சிதா. ரசிகர்களின் பேராதரவோடு... 91 நாட்கள் தாக்குப் பிடித்து சிறப்பாக விளையாடினார். பிக்பாஸை விட்டு வெளியேறியதில் இருந்து பல ஷோக்களிலும் பங்குபற்றி வருகின்றார். அத்தோடு அண்மையில் புதிய கார் ஒன்றையும் வாங்கியிருந்தார்.

இப்படியான நிலையில் ரச்சிதா இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு உள்ள கொழும்பு நகரத்தில் இருந்து ஒரு வீடியோ எடுத்து வெளியிடடுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement