• Jul 25 2025

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ரி என்ட்ரி கொடுத்த ரச்சிதா- அந்த ஒரு நபரை மட்டும் புறக்கணிப்பு- காரணம் இது தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியானது தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் ஆரம்பத்தில் இருந்து எவிக்ட் ஆகிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வண்ணமாக இருக்கும் நிலையில் இன்று ரச்சிதாவின் வருகை அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.  

அதனால் ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்கு நான் போகப்போகிறேன் என்று நேற்று வெளியிட்ட பதிவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து எப்போது வருவார் என்று ஆர்வத்தோடு காத்திருந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் ரச்சிதா செய்த செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.


பிக் பாஸ் வீட்டில் அனைவரிடமும் சகஜமாக பேசி பழகிய ரச்சிதா அங்கே இருந்த ராபர்ட் மாஸ்டரை மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. இதை ரசிகர்கள் பலரும் 24 மணி நேரத்தில் நோட் பண்ணி இருக்கின்றனர்.ஏற்கனவே ராபர்ட் மாஸ்டரால் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய பெயர் எந்த அளவிற்கு அடிபட்டது என்பதை ரச்சிதா வெளியே வந்து நன்றாக பார்த்துவிட்டார். 


அதனால் தான் ரச்சிதா இப்போது சரியாக நடந்து கொண்டு இருக்கிறார் என்று ஒரு சிலர் கருத்து கூறி வந்தாலும், ராபர்ட் மாஸ்டர் இப்பவும் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கே இருந்து ரச்சிதாவை பார்த்த வண்ணமாகவே இருக்கிறார் என்று சிலர் அதில் கலாய்த்து வருகின்றனர்.ராபர்ட் மாஸ்டர் நேரடியாக ரச்சிதாவிடம் பேசவில்லை என்றாலும் அவருடைய பார்வை மட்டும் ரச்சிதாவை விட்டு அகலவே இல்லையே என்று சிலர் கலாய்த்து கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement