• Jul 25 2025

சுந்தரி சீரியல் கேப்ரியல்லாவுக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் வினுஜா தேவிக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கின்றதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அழகாக இருந்தால்தான் அதற்கு மதிப்பு என்று சிலர் நினைத்துக் கொண்டிருப்பதை பொய் என்று நிரூபிக்கும் விதமாக ஒரு சில நடிகைகள் தான் தங்களுடைய திறமையை நிரூபித்து வருகிறார்கள். அந்த வரிசையில் உள்ளவர்கள் தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கதாநாயகி கேப்ரியல்லா மற்றும் பாரதிகண்ணம்மா சீரியல் கதாநாயகி வினுஷா தேவி.

இவர்கள் இருவரும் சீரியலில் மூலமாக ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருக்கின்றனர். கலராகவும் அதிகமான மேக்கப் போட்டு வந்தால் தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் ரசிப்பார்கள் என்பதை புறம் தள்ளிய இவர்கள் இருவருக்கும் அதிகமான ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அந்த வகையில் இரண்டு நடிகைகளுமே கருப்பு தேவதைகள் தான் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பலர் கலராக இருக்க வேண்டும் என்பதற்காக கண்ட கண்ட க்ரீம்களை தேடி ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில், கருப்பாக இருந்தாலும் திறமை இருந்தால் முன்னுக்கு வந்துவிடலாம் என்று நிரூபிக்கும் விதமாக இவர்கள் இருவரும் சீரியலில் மூலமாக நாளுக்கு நாள் ரசிகர்களின் மத்தியில் தங்களுடைய திறமையை காட்டி வருகின்றனர். 


தன்னுடைய தனித் திறமைகளை நிரூபிக்க வேண்டும் என வீட்டை விட்டு வெளியே வந்த கேப்ரியல்லா கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் சமூக வலைத்தளத்தின் மூலமாக ரசிகர்களிடம் நேரடியாகவே பழகி வந்தார். இந்த நிலையில் தான் இவருக்கு சுந்தரி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இப்போது சன் டிவி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வரும் இவருக்கு ஒரு சில நாட்களாகவே நெகட்டிவ் கருத்துகளும் வந்த வண்ணமாக இருக்கிறது. காரணம் சீரியலில் இவருடைய கேரக்டர் போல்டாக ஆரம்பத்தில் முடிவெடுத்து பெண்களுக்கு உதாரணமாக இருந்த நிலையில் தற்போது எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருக்கிறார் என்று சிலர் அதில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது கேப்ரியல்லா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மாவாக நடிக்கும் வினிஷா தேவியோடு புகைப்படத்தை எடுத்து அதை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஹலோ கண்ணம்மா என்றென்றும் என்னுடைய தங்கச்சி என்று பதிவிட, அதற்கு வினுஷா தேவி வணக்கம் சுந்தரி அக்கா என்று கருத்து பதிவிட இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

இவர்கள் இருவரும் ஏற்கனவே தெரிந்தவர்கள் தானா? இருவருக்கும் உண்மையிலே அக்கா தங்கச்சி உறவு தானா? என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் இருவருமே நடிப்புத் துறைக்கு வந்து சகோதரிகளாக மாறிவிட்டனர் என்று கூறி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement