• Jul 26 2025

"விஜய்க்கு காஸ்லியான விக் கொடுத்தார்கள்"... உண்மையை போட்டுடைத்த ராதாரவி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தற்போது 'லியோ' படப்பிடிப்பில் பிசியாக கலந்து வருகிறார். இப்படத்தில் பலரையும் கவர்ந்த ஒரு விடயம் என்றால் அது விஜய்யின் ஹேர் ஸ்டைல் தான். விஜய் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான ஹேர் ஸ்டைலில் நடித்து வருவதை நாம் அனைவரும் பார்த்த வண்ணம் தான் இருக்கின்றோம். 


இதனையடுத்து விஜய் விக் பயன்படுத்தி தான் தனது இப்படி மாற்றிக்கொண்டு இருக்கிறார் என பல சர்ச்சைக் கருத்துக்களும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் விஜய் இதையெல்லாம் சற்றேனும் கண்டுகொள்வதில்லை. தனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார்.


இந்நிலையில் நடிகர் ராதாரவி விஜய்யின் விக் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். அதாவது அவர் கூறுகையில் "சர்கார் படத்தில் விஜய்யுடன் இணைந்து நான் நடித்தேன். அந்த படத்தில் எனக்கு விக் வைத்தார்கள். அந்த விக்கின் விலை மிகவும் குறைவு, அதற்கு நான் கேட்டேன், உங்க ஹீரோவுக்கு மட்டும் காஸ்லியான விக் எனக்கு மட்டும் இதுவா? என கேட்டேன். எல்லாம் முடியும் ஒன்னு தான். ஹீரோவுக்கு வெச்சாலும் அதே முடி தான், ராதாரவிக்கு வெச்சாலும் அதே முடி தான்" என்று பேசியுள்ளார். 


இந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement