• Jul 26 2025

44 வயதில் திடீர் திருமணம் செய்த பிரபல நடிகை - விஷயத்தைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சூர்யவம்சம் படத்தின் மூலம்  திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை லாவண்யா தேவி. 90களில் பல தமிழ் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 


அதன்பின், ரஜினியின் படையப்பா படத்தில் சிறியகதாப்பாத்திரத்தில்  நடித்திருந்தாலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.


இதனைத் தொடர்ந்து, ஜோடி, சேது போன்ற படங்களிலும் நடித்துள்ளார். திருமலை, வில்லன், எதிரி, ரன், சமுத்திரம், சுந்தரா டிராவல்ஸ், நான் தான் பாலா உட்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் சப்போர்டிங் கேரக்டரில் கலக்கி வந்தார்.


அதனையடுத்து சினிமாவில் இருந்து சின்னத்திரை பக்கம் திரும்பினார். தற்போது சன் டிவி-யின் அருவி சீரியலில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.


இவ்வாறுஇருக்கையில், லாவண்யா, பிரசன்னா என்பவரை திருப்பதியில் மணந்துள்ளார். அந்த புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்கள்  பலரும் வாழ்த்து கூறிய நிலையில்  சிலர் 44வயதில் தான்  திருமணம் செய்கிறாரா என ஆடிப்போய் கெமண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.



Advertisement

Advertisement