• Jul 26 2025

ஆள் அடையாளமே தெரியாதளவிற்கு மாறிப்போயுள்ள ராதாரவி.. ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கதாநாயகர்களை மட்டுமன்றி ஒரு சில வில்லன் நடிகர்களையும் நம்மால் மறக்க முடியாது. அவ்வாறு 80களில் கலக்கிய நிறைய நடிகர்கள் உள்ளார்கள். அதில் வில்லன் கதாபாத்திரத்திற்கே பேர் போன ஒருவராக விளங்கியவர் தான் நடிகர் ராதா ரவி. 


இவர் எம்.ஆர். ராதாவின் மகன் என்ற பெருமையோடு சினிமாவில் உள் நுழைந்து அதன்பின்பு ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். அத்தோடு ராதாரவி சினிமாவை தாண்டி அரசியலில் அதிக ஈடுபாடு காட்டியுள்ளார். இருப்பினும் அரசியலில் நிறைய பிரச்சனைகள், சர்ச்சைகளில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நடிப்பு, அரசியல் என்பவற்றைத் தாண்டி டப்பிங் துறையிலும் இவர் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறார். இந்நிலையில் எப்போதும் வெள்ளை நிற பேன்ட், ஷேட்டில் வலம் வரும் இவர் தற்போது கோட்-சூட், கூலிங் கிளாஸ் போட்டு ஒரு கலக்கலான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் "ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு இப்படி மாறி விட்டீர்களே" எனக் கூறித் தங்களது கமெண்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement