• Jul 26 2025

பாக்கியாவைப் போல கோபியை விரட்டி விட நினைக்கும் ராதிகா- எதிர்பாராத திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி. பணத்திற்காக திருமணம் செய்ய இருந்த எழிலை தடுத்து நிறுத்தி அவர் விரும்பிய ரித்திகாவையே திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் ஈஸ்வரி கடும் கோபத்தில் இருக்கின்றார்.

மேலும் கோபி தன்னுடைய வீட்டினை விற்பதற்கு இன்னும் 6மாத கால அவகாசம் கொடுத்துள்ளார்.இதனால் பாக்கியா கிடைக்கும் ஆடர்களை எல்லாம் எடுத்து சமைத்து வருகின்றார்.இந்த நிலையில் இந்த சீரியலில் புதுத் திருப்பம் ஒன்று காத்திருக்கின்றது.


தற்போது கோபியிடம் ராதிகா இன்னும் குடும்ப செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் கோபி தனது பிசினஸில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பணத்தை தர மறுத்து ராதிகாவை திட்டுகிறார். நான் கொடுக்கிற பணத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியாதா என்று சத்தமிடுகிறார்.


இதனால் கோபமடைந்த ராதிகா எதுக்காகஇப்படி சத்தம் போடுகிறீர்கள்? நீங்கள் கல்யாணத்துக்கு முன்பாக எனக்கும் மயூவுக்கும் கேட்டதெல்லாம் கொடுப்பீர்கள் என்று சொல்லி தான கல்யாணம் செய்தீர்கள் என்று சண்டையிடுகிறார். இதனால் வாக்குவாதம் பெரிதாகி ராதிகா கோபியை வெறுக்க ஆரம்பிக்கிறார். மேலும் ராதிகா எதிரியாக நினைத்த பாக்யாவுடன் இணைந்து நட்பை தொடர உள்ளார். இவை வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது ஆனால் எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.


Advertisement

Advertisement