• Jul 24 2025

பாக்கியாவின் காலை வார ராதிகா எடுத்த முடிவு... அதிர்ச்சியில் இருக்கும் பாக்கியா... இனி நிகழப்போவது என்ன..? video இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்  சூப்பராக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் எதிர்பார்க்காத திருப்பங்களோட இந்த சீரியல் நகர்ந்து கொண்டு இருக்கின்றது. அந்தவகையில் பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ் ஆகி இருக்கின்றது.


அதில் ராதிகா "பாக்கியலட்சுமி மேடம் ஈஸ்வரி கேன்டீனை இங்க தொடர்ந்து நடத்தணுமா? வேணாமா என்பதை நீங்க எல்லாரும் போடுற வோட் தான் முடிவு பண்ணிக்கும்" என்பதனை அங்கு வேலை செய்பவர்களுக்கு கூறுகின்றார்.


இதனையடுத்து வோட் பண்ணும் வேலைகள் இடம்பெறுகின்றன. அருகில் நின்றவர்கள் "அவங்க எல்லாரும் நம்ம கையால சாப்பிட்டவங்க கண்டிப்பாக நமக்குத்தான் வோட் பண்ணுவாங்க" என அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் பாக்கியாவிற்கு ஆறுதல் கூறுகின்றனர்.


பின்னர் பாக்கியாவிற்கு அருகில் வந்த ராதிகா "இது என் ஆபீஸ், என் ஆட்கள் என்னை மீறி உங்களுக்கு வோட் பண்ணுவாங்க என்று நினைக்கிறீங்களா" எனக் கேட்டு சவால் விட்டுச் செல்கின்றார். இதனையடுத்து பாக்கிய மிகவும் குழப்பத்தில் இருக்கின்றார்.

இந்த நெருக்கடியான சூழலில் இருந்து பாக்கியா மீண்டு வருவாரா..? இல்லையா..? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..! 


Advertisement

Advertisement