• Jul 26 2025

சரஸ்வதியை ஆக்ஸ்சிடென்ட் பண்ணியது அர்ஜுன் தான் என சந்தேகப்படும் ராகினி- கடும் கோபத்தில் கோதை- Thamizhum Saraswathiyum Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கப் போகின்றது என்பதைப் பார்ப்போம்.

சரஸ்வதிக்கு ஆக்ஸ்சிடென்ட் ஆனதால் கோதையும் நடேசனும் வசுவும் ஹாஸ்பிட்டலுக்கு போய் நிற்கின்றனர்.அந்த நேரம் பார்த்து தமிழும் வர டாக்டர் வந்து சரஸ்வதிக்கு ஒன்றுமில்லை, அவங்க நல்லாத் தான் இருக்கிறாங்க,கொஞ்சம் அதிர்ச்சியாகிட்டாங்க அவங்கள கவனமாகப் பார்த்துக்கோங்க என்று சொல்கின்றார்.


சரஸ்வதிக்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் எல்லோரும் சந்தோசப்படுகின்றனர்.அப்போது நமச்சி ஆக்ஸ்சிடென்ட் ஆனதற்கு அந்த அர்ஜுன் தான்காரணம் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர். தமிழைப் பழிவாங்க தான் இப்படி செய்திருக்கோனும் என்று சொல்ல எல்லோரும் அர்ஜுனைத் திட்டுகின்றனர்.

பின்னர் தமிழ் அவனை பின்பு கவனிச்சுக்கலாம் இப்போ எல்லோரும் புது வீட்டுக்கு போகலாம் என்று சரஸ்வதியையும் கூட்டிக் கொண்டு கிளம்பிப் போகின்றனர். அங்கு கார்த்திக் சரஸ்வதியின் உடல் நலம் குறித்து கேட்க நமச்சி அர்ஜுன் தான் இதுக்கெல்லாம் காரணம் என்று சொல்ல, நடேசன் அர்ஜுனை போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கனும் என்று சொல்கின்றார்.


அப்போது கோதை எதுக்குங்க தேவையில்லாம நம்ம நிம்மதியை நாமளே இழக்கனும் விட்டிடுங்க பார்த்துக்கலாம் என்கின்றார். தொடர்ந்து வீட்டை அலங்கரித்து பால்காய்ச்சி பூஜை செய்து சந்தோசமாக இருக்கின்றனர். மறுபுறம் ராகினி சாப்பிடாமல் சரஸ்வதிக்கு என்ன ஆச்சோ தெரில என்று நினைத்து புலம்பிக் கொண்டிருக்கின்றார்.

அந்த நேரம் அர்ஜுனின் மாமா ராகினி இருப்பதை கவனிக்காமல் ஹாஸ்பிட்டலுக்கு போனதாகவும், தாங்க நினைச்ச மாதிரி ஒன்றும் நடக்கல என்றும் சொல்கின்றார்.இதைக் கேட்ட ராகினி என்ன நடக்கல என்று சந்தேகமாகக் கேட்க அவர் சமாளித்து விடுவதோடு சரஸ்திக்கு ஒன்றுமில்லை என்கின்றார். 


அப்போது அர்ஜுன் சோகமாக இருப்பதை கவனித்த ராகினி அர்ஜுனிடம் இதுக்கும் உங்களுக்கும் சம்மந்தமில்லையா என்று கேட்க அர்ஜுன் நடித்து நீயும் இப்பிடி கேட்டால் எப்பிடி ராகினி என்று சொல்லி தன்னில் தவறு இல்லாதது போல காட்டிக் கொள்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement