• Jul 26 2025

விஜய் மகனை காதலிக்கிறேனா..? உண்மையை உடைத்த ரவீனா தாஹா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான மெளன ராகம் சீசன் 2 சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரவீனா. . அதுமட்டுமின்றி ரவீனா தாஹா குழந்தை நட்சத்திரமாக ஜில்லா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அத்தோடு கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் ரவீனா தாஹா தற்போது தமிழ் பிக்பாஸ்  சீசன் 7நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி இருக்கின்றார்.

சமீபத்தில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை ரவீனா காதலிப்பதாக செய்திகள் காட்டுத்தீ போல் பரவியது. இது தொடர்பாக ரவீனா சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் கூறுகையில் "அந்த செய்தி பற்றி என் நண்பர்கள் கூறித்தான் எனக்கே தெரிய வந்தது, அதை பார்த்து என்ன கொடுமை இது என்று வருத்தப்பட்டேன்" என்றார்.


மேலும் "நான் விஜய்யின் தீவிர ரசிகை என்பதால் அவருடன் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் நடிக்க வாய்ப்பில்லை என்பதால் அவரது மகன் நடிக்க ஆரம்பித்தால் அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தான் நான் கூறினேன். அதை தவறாக புரிந்து காதலிப்பதாக கூறி பரப்பிவிட்டார்கள்" எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரவீனா தாஹா.

Advertisement

Advertisement