• Jul 26 2025

கோதையை கோயிலில் நகை இல்லாமல் பார்த்ததால் ராகினி எடுத்த முடிவு- அதிர்ச்சியல் உறைந்த அர்ஜுன்- Thamizhum Saraswathiyum Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

கோதையை கோயிலில் கண்ட ராகினி என்னம்மா ஒரு நகை கூட போடாமல் இருக்கிறீங்க என்று கேட்கின்றார். அப்போது வசு எங்களுடைய இந்த நிலமைக்கு உன்னோட கணவர் தான் காரணம் என்றால் நீ நம்பவா போகின்றாய் என்று கேட்கின்றார்.அப்போது அர்ஜுனின் அக்கா  எல்லாத்திற்கும் என் தம்பியைத் தான் குறை சொல்லுவீங்களா என்று கேட்கின்றார். 

இதனால் கோயிலில் வைத்து அர்ஜுனின் அக்காவுக்கும் சரஸ்வதிக்கும் இடையில் சண்டை ஏற்பட கோதை அதெல்லாம் விட்டிடுங்க என்று சமாளிப்பதோடு ராகினியை உடம்பைப் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டுச் செல்கின்றார். தொடர்ந்து வீட்டிற்கு வரும் போது அர்ஜுன் ராகினியிடம் எங்கு போய்ட்டு வருகின்றாய் என்று கேட்கின்றார்.


அப்போது ராகினி கோயிலுக்கு போய்ட்டு வந்ததாக சொல்ல,அர்ஜுனின் அக்கா இன்டைக்கு கோதையை கோயில் நகை இல்லாமல் பார்த்து எவ்வளவு சந்தோசமாக இருக்கு என்று சொல்ல, அர்ஜுனின் அம்மா தன்னால் இந்த விஷயத்தைப் பார்க்க முடியலையே என்று சொல்ல ராகினி அதிர்ச்சியடைந்து இருவரையும் பார்க்கின்றார்.

பின்னர் அர்ஜுன் நீ ரெஸ்ட் எடு என்று அனுப்பி வைத்து விட்டு தமிழ் கம்பெனி எரிந்ததால் இவன் எடுத்த பெரிய ஆடரை அவனால் செய்து முடிக்க முடியாது. இதனால் கண்டிப்பாக தமிழ் கம்பெனியை விற்றுவிட்டு திரும்ப பழைய நிலமைக்கே போய்டுவான் என்று சொல்லி சந்தோசப்படுகின்றனர். மறுபுறம்,தமிழ் ஆடர் எடுத்த கம்பெனி ஓனரிடம் சென்று பேசுகின்றார். இவர் இன்னும் ஒரு வாரத்தில் ஆடர் எல்லாவற்றையும் செய்து முடித்து தந்திடனும் என்று சொல்கின்றார். இதைக் கேட்ட தமிழ் என்ன செய்தென்று குழப்பத்தில் இருக்கின்றார்.

இதனால் வீட்டிற்கு வந்து நடந்ததைச் சொல்கின்றார். அப்போது உமாபதி என்னும் ஓனர் வந்து ஒரு கம்பெனி முதலாளிக்கு ஆப்பிரேஷன் பண்ணனும் அதற்கு பணம் வேண்டும். அசோசியேசன்ல இருந்து ஏதாவது பணம் தரமுடியுமா என்று கேட்கின்றார்.இதனால் தமிழ் தன்னுடைய பிரச்சினைக்கு அவரிடம் பணம் கேட்கலாம் என்று பார்த்தால் அவருக்கு பணம் தேவையாக இருக்கே என்ற குழப்பத்தில் இருக்கின்றார்.


மறுபுறம் ராகினி அம்மாவை நகை இல்லாமல் பார்த்தது கஷ்டமாக இருக்கு, அவங்களுக்கு தேவையான பணத்தை நாம கொடுக்கலாமா, அதுக்கு நான் செக் எழுதித் தரவா என்று கேட்கின்றார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement