• Jul 25 2025

பிரபல இயக்குநரை ரகசியத் திருமணம் செய்து மறைந்து வாழும் ராஜா ராணி திரைப்பட நடிகை- உண்மையை உளறிய நடிகை கல்பிகா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி உள்ளிட்டப் படங்களில் ஹீரோயினின் தோழியாக நடித்திருந்தவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணா.

இவர் ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் பரபரப்பை கிளப்பியுள்ளார்.இது குறித்துப் பேசிய அவர், “இயக்குநர் பாலாஜி மோகனுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் தன்யா. இந்த ஆண்டு ஜனவரியில் திருமணமும் செய்துக் கொண்டார். 


திருமணமாகி ஒரு வருடமாகியும், இருவரும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை” என்றார் கல்பிகா. அத்தோடு தன்யா தனது படங்களின் ப்ரமோஷன்களை தவிர்த்து வருவதாகவும் கூறினார். "ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள அவரது கணவர் தடுப்பதாக நான் கருதுகிறேன்" என்றும் தெரிவித்தார்.

தன்யா குறித்து கல்பிகா பேசியிருந்த வீடியோ யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த அவர், தன்யா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வீடியோவை நீக்கியதாகக் குற்றம் சாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement