• Jul 26 2025

பாடகி ஸ்ரேயா கோஷலா இது?- சிறுவயதில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க- லைக்குகளை வாரி குவிக்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட பாடல்களைப் பாடி வரும் முன்னணி பாடகி தான்  ஸ்ரேயா கோஷல். பாலிவூட்டில் ஒளிபரப்பான சரிகமப என்னும் டிவி ஷோ மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி முன்னணி பாடகியாக உயர்ந்தவர்.

பாலிவூட்டில்  ஏராளமான பாடல்களைப் பாடி வந்த இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான "சில்லுனு ஒரு காதல்" படத்தில் சில பாடல்களைப் பாடினார்.இப்பாடல்கள் அனைததும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் குவிந்தது.


தொடர்ந்து பல பாடல்களைப் பாடி வந்த இவர் இதுவரை நான்கு தேசிய விருது, இரண்டு தமிழ் மாநில விருது, நான்கு கேரளா மாநில விருது, மற்றும் பத்து பிலிம்பேர் விருதுகளையும் வாங்கியுள்ளார். இவருக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளதாக அறித்தும் இருந்தார்.


சிறுவயதிலேயே பாரம்பரிய இசை பயிற்சியினை தொடங்கிவிட்டாராம் ஸ்ரேயா கோஷல். இந்த நிலையில் தற்போது அவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement