• Jul 23 2025

திடீரென முடிவுக்கு வரும் ராஜா ராணி சீரியல் - என்ன காரணம் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'ராஜா ராணி 2' இந்த சீரியலை பிரவீன் பெனட் இயக்கி வந்த நிலையில், சமீபத்தில் இந்த தொடரை நான் இயக்கவில்லை என்பதை வெளிப்படையாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதை தொடர்ந்து 'ராஜா ராணி 2' தொடரில், இருந்து ஆல்யா மானசா விலகிய பின்னர் கடந்த ஒரு வருடமாக சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரியா விஸ்வநாதனுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், திடீரென அவரும் இந்த சீரியலில் இருந்து விலகினார்.


இதனை அடுத்து தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகளும் தெரிய வந்துவிட்டது. அதாவது ஆதி பற்றிய உண்மைகள் தெரிய வந்து விட்டதோடு அர்ச்சனா தன்னுடைய குழந்தை பற்றிய உண்மைகளையும் சொல்லி விட்டார்.


தற்பொழுது சிவகாமி மகளுக்காக ஒரு கொலையும் செய்து விட்டார்.இப்படியான நிலையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியல் முடிவுக்கு வரப்போவதாக கூறப்படுகின்றது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement