• Jul 25 2025

கடவுளை பார்த்துவிட்டேன்...பிரபல இயக்குநரைப் பார்த்து நெகிழ்ந்த ராஜமௌலி

Cine / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்,தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி பான் இந்தியத் திரைப்படமாக வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஆர்.ஆர்.ஆர்.ராம் சரண்,ஜூனியர் என்டிஆர், அஜய் தேவன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் ஆகியோரது நடிப்பில் வெளியாகிய இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.

இப்படத்தில் இடம் பெற்ற  நாட்டுக்குத்து பாடல் சிறந்த பாடல் பிரிவில் இந்தாண்டுக்கான கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்த கோலாகல விழாவில், ஆர்.ஆர்.ஆர் நட்சத்திரங்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்து, "நான் கடவுளை சந்தித்தேன்" என தலைப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement