• Jul 24 2025

'மீனா 40' விழாவில் சிங்கம் போல் வந்த ரஜினி.. பார்த்ததுமே பம்மிய சரத்குமார்.. நெகிழ்ச்சியில் கலா மாஸ்டர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை மீனா திரையில் நடிக்கத் தொடங்கி 40 ஆண்டுகளை கடந்துள்ளார். இதைக் கொண்டாடும் வகையில் அவரது திரையுலக நண்பர்கள் 'மீனா 40' என்ற நிகழ்ச்சியை நேற்றைய தினம் ஒழுங்கு செய்திருந்தனர். இதில் ரஜினி, ஜீவா, ரோஜா, சரத்குமார், ராதிகா, சினேகா உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

RK மாநாட்டில் நேற்று மாலை 5மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக ரஜினிகாந்தும் கலந்து கொண்டிருந்தார். இவர் இந்த விழாவிற்குள் உள் நுழையும் போதே பலத்த கரகோஷங்கள், ஆரவாரங்கள் என அரங்கமே அதிர்ந்திருந்தது.


அதுமட்டுமல்லாது ரஜினிகாந்த் வந்ததுமே மற்றப் பிரபலங்கள் எல்லோருமே வச்ச கண் வாங்காமல் அவரையே பார்த்திட்டு இருந்தார்கள். ஒரு காட்டிற்குள் சிங்கம் நடந்து வந்ததை போல் ரஜினி நடந்து வந்தார். ரஜினியைக் கண்டதும் கலா மாஸ்டர் உடனே கடவுளைக் கண்டது போல் ரொம்பவே நெகிழ்ந்து போனார்.


அதன் பின்னர் சரத்குமார் அவரைப் பார்த்தும் சற்றுப் பம்மிக்கொண்டு "வாங்க தலைவா" அப்பிடி என்று தட்டிக் கொடுத்து விட்டு நின்றார். அடுத்ததாக ரஜினி போனி கபூர் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டார். போனி கபூரும் ரஜினியிடம் ஒரு சில வார்த்தைகள் பேசி இருந்தார். இவ்வாறாக 'மீனா 40' நிகழ்ச்சியில் பல சுவாரஷ்யமான நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. 

Advertisement

Advertisement