• Jul 25 2025

சினிமாவில் முன்பணமாக 1ரூபாய் மட்டுமே வாங்கும் ரஜினி... அவர் மட்டும் இல்லை இவரும் அப்படித்தானாம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஹீரோக்களில் 'சூப்பர் ஸ்டார்' எனவும் காமெடி நடிகர்களில் 'நகைச்சுவை சக்கரவர்த்தி' எனவும் சிறப்பாக இன்றுவரை அழைக்கப்படுபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி. குறிப்பாக '16 வயதினிலே' என்ற திரைப்படத்தின் வாயிலாக தொடங்கிய இவர்களது கூட்டணி யாருமே மறக்க முடியாத அளவிற்கு பல படங்களில் வெற்றிகரமாக வலம் வந்தது. 


அந்தவகையில் 'மன்னன், உழைப்பாளி' போன்ற படங்களில் இடம் பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகள் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளான். இந்த இரண்டு படங்களையுமே இயக்குநர் பி.வாசு தான் இயக்கியிருப்பார். அதேபோல தான் இயக்குநர் பி.வாசு இயக்கிய பல படங்களில் கவுண்டமணி காமெடி நடிகராக நடித்துள்ளார். 


அதிலும் குறிப்பா 'நடிகன், சின்னத்தம்பி, சேதுபதி ஐ.பி.எஸ்' போன்ற படங்களில் அவருடைய நகைச்சுவை காட்சிகள் மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் சிறந்த வரவேற்பை பெற்றவை.

இப்படி சூப்பர் ஸ்டாராகவும் நகைச்சுவை சக்கரவர்த்தியாகவும் முன்னணி நடிகர்களாக விளங்கிய ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி வெறும் ஒரு ரூபாய் மட்டுமே முன் பணமாக வாங்கிக் கொண்டு நடிப்பார்கள் என வாசு சமீபத்தில் இடம்பெற்ற தெரிவித்துள்ளார்.

அதாவது இன்றைய காலத்தில் நடிகர்களில் பல பேர் முழு சம்பளத்தையும் படத்தின் தொடக்கத்திலேயே வாங்கிக் கொண்டுதான் நடிப்பார்கள். அதற்கு முக்கிய காரணம் என்னவெனில் படம் முடிவடையும் தருவாயில் சில நேரம் தயாரிப்பாளரிடம் பணம் இல்லாமல் போய்விடும். அதற்காகவே பல நாள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 

இவ்வாறான சூழ்நிலைகளைத் தவிர்க்கவே நடிகர்கள் அவ்வாறு முழு பணத்தையும் முன்னதாகவே வாங்கிக் கொள்வார்கள். அப்படி முன்னதாகவே அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு அந்தப் படம் முடிந்து திரையில் வரும் வரை ஒவ்வொரு மாதமும் வட்டி கட்டி வருவார்கள் தயாரிப்பாளர்கள்.


சினிமாத் திரையுலகில் இப்படி இருப்பவர்கள் மத்தியில் அப்போதே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்ற பட்டியலில் இருந்தாலும் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே முன் பணம் வாங்கிக் கொள்வார்களாம் பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் கவுண்டமணி. 

அதாவது படப்பிடிப்பு முடிந்து டப்பிங்கில் கடைசி ரீல் பேசும் பொழுதுதான் இருவரும் தங்களுடைய சம்பளத்தை வாங்குவார்களாம். அதிலும் குறிப்பாக ரஜினிகாந்த் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிப்பார் என்று பலரும் பல பேட்டிகளில் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். 


ஆனால் கவுண்டமணியும் ரஜினிகாந்த் போல அப்படித்தான் செய்வார் என்று வாசு குறிப்பிட்டிருக்கிறார். இதே போல நடிகர் விஜயகாந்த் கூட பலமுறை தன்னுடைய சம்பளத்தில் பெரும் பகுதியை விட்டுக் கொடுத்துள்ளார் என்று பல தயாரிப்பாளர்கள் புகழ்ந்து கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement