• Jul 26 2025

பணமின்றித் தவித்த வி.ஏ. துரைக்கு உதவ முன்வந்த ரஜினிகாந்த், லாரன்ஸ்.. இந்த மனசுதான் சார் கடவுள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் 'கஜேந்திரா, பிதாமகன்' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து ரசிகர்கள் மத்தியில் தயாரிப்பாளர் வி.ஏ. துரை. அதுமட்டுமல்லாது இவர் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' உள்பட ஒரு சில படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்து உள்ளார்.


இந்த நிலையில் சமீபத்தில் அவர் வறுமையின் காரணமாக தவித்து வருவதாகவும் நீரிழிவு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருப்பதாகவும் வீடியோ ஒன்றின் மூலம் பலருக்கும் தெரிவித்து இருந்தார். 


இதனையடுத்து தற்போது அவரது நண்பர்கள் அவரை ஒரு வீட்டில் தங்க வைத்து, அவருக்குத் தேவையான உதவிகள் யாவற்றையும் செய்து வருகின்றனர். இருப்பினும் தனது சிகிச்சைக்கு அதிகம் பணம் தேவைப்படுவதால் திரையுலகினர் கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார் வி.ஏ. துரை. 

இவரின் இந்த வீடியோ ஆனது இணையதளங்களில் படு வைரலான நிலையில் தயாரிப்பாளர் விஏ துரையின் மருத்துவச் செலவுக்காக நடிகர்களான சூர்யா. கருணாஸ் ஆகியோர் 2 லட்சம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோரிய தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் தொலைபேசியில் நலம் விசாரித்திருந்தார் ரஜினிகாந்த். 


அந்தவகையில் அவரிடம் "எதற்கும் கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன்" எக் கூறி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்ததும் நேரில் சந்திப்பதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 


இவரைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ராகவா லாரன்ஸும் ரூ 5. லட்சம் வரை வழங்குவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement