• Jul 26 2025

4ஆவது கணவருடன் வசிப்பதற்கு.. 523 கோடி ரூபாய்க்கு 8பெட் ரூமுடன்.. அரண்மனை போல் வீடு வாங்கிய பிரபல நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'அனகோண்டா' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜெனிஃபர் லோபஸ். இப்படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்த நிலையில், 4வது முறையாக 50 வயதான 'பேட்மேன்' பட நடிகர் பென் அஃப்லெக் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


இந்நிலையில் பிரம்மாண்ட அரண்மனை ஒன்றை பல நூறு கோடி கொடுத்து தற்போது வாங்கி உள்ளனர். அந்தவகையில் லாஸ் ஏஞ்சல்ஸில் புதிதாக இவர்கள் வாங்கி உள்ள இந்த வீட்டை வீடு என்று சொல்வதை விட அரண்மனை என்று தான் சொல்ல வேண்டும். 


அந்த அளவுக்கு 8 பெட்ரூம், 11 பாத்ரூம், 800 சதுர அடியில் ஒரு ஜிம் ரூம், தனியாக ஸ்பா செய்யும் நீச்சல் குளம், என ஒட்டுமொத்தமாக 16 ஆயிரம் சதுர அடியில் இந்த வீட்டில் தங்களுக்கு பிடித்த மாதிரி இன்டீரியர் வேலைகளை செய்து வருகின்றனர்.


மேலும் 60 மில்லியன் டாலர் மதிப்பில் வாங்கி உள்ள இந்த சொகுசு பங்களாவின் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 523 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement