• Jul 23 2025

ஜெயிலர் பாடல் மூலம் விஜய்யைக் கண்டித்த ரஜினிகாந்த்- பரபரப்பை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் நேரடி எச்சரிக்கை என்கிற தலைப்பிலேயே பயில்வான் ரங்கநாதன்  வீடியோ வெளியிட்டு சினிமா உலகத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளார்.இதற்கு காரணமே நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ள செகண்ட் சிங்கிள் தா. வெறும் ‘Hukum’ என்கிற தலைப்பில் அறிவிக்கப்பட்ட இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்படும் விஜய்க்கான எதிர்வினையாகவே உருவாகி இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் விளாசி உள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர நினைத்தால், அவருக்கு சூர்யா ரசிகர்களோ, அஜித் ரசிகர்களோ, ரஜினிகாந்த் ரசிகர்களோ கூட ஓட்டுப் போட மாட்டார்கள். மூத்த நடிகர்களை முதலில் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மேலும், சினிமாவில் அனைவரிடமும் போட்டியின்றி நட்புறவாக இருந்தால் அடுத்த கட்ட நகர்வுக்கு அது பெரிதும் வழிவகுக்கும்.


சூப்பர் ஸ்டார் பிரச்சனை பூதாகரமாக வெளியான போது நடிகர் விஜய் ஒரு வார்த்தையாவது பேசி அதனை தவிர்த்து இருந்திருக்க வேண்டும். ஆனால், தனக்கு இருக்கும் ஆசை காரணமாகவே அதை அவர் செய்யவில்லை என விமர்சனங்கள் குவிந்தன.


இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே எனக்கு எண்ட் கார்டு போட நினைத்தால், நான் டிரெண்டாக மாறி வருவேன் என காவாலா ஹிட்டையே குறிக்கும் விதமாக ரஜினிகாந்தின் ஜெயிலர் பாடல் உள்ளது என்றும் உங்கப்பன் விசிலை கேட்டவன், உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன் என பல வரிகளும் படு மாஸாகவும் அதே நேரத்தில் உள்குத்து நிறைந்து இருக்கிறது என்றும் பயில்வான் ரங்கநாதன் தனது புதிய வீடியோவில் பேசி உள்ளார். மேலும், சமூக வலைதளங்கள் முழுவதும் விஜய் ரசிகர்களுக்கு சரியான பாடத்தை சூப்பர்ஸ்டார் புகட்டி உள்ளார் என்றும் என்றைக்குமே அவர் ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் என ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement