• Jul 26 2025

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்... மீண்டும் சிக்கலில் சிக்கிய ராக்கி சாவந்த் கணவர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகையான  ராக்கி சாவந்த் சர்ச்சைக்கு பெயர் போனவர் எனலாம்.இவர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இவர் கடந்த ஆண்டு அதில் கான் துரானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 


இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அதில் துரானிக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது என ராக்கி சாவந்த் குற்றச் சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார். இதற்கு முன்பதாக தன்னை அடித்து துன்புறுத்தி, பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றை திருடி சென்று விட்டார் என கணவர் மீது போலீசில் பரபரப்பு புகார் ஒன்றினையும் அளித்து உள்ளார். 


அத்தோடு சில தினங்களுக்கு முன்பாக மற்றொரு பரபரப்பு புகாரை கணவர் அதில் மீது ராக்கி சாவந்த் கூறினார். அதில், தன்னை நிர்வாண படம் பிடித்து, பணத்திற்காக விற்று விட்டார் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது இந்த வழக்கு சைபர் கிரைம் துறையிடம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் தற்போது அதில் கான் துர்ரானி மீது மைசூரு நகரில் ஈரான் நாட்டை சேர்ந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றினைத் தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறுகையில் "மைசூருவில் ஒன்றாக வசித்தபோது, தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என பொய் கூறி அதில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அவரிடம், 5 மாதங்களுக்கு முன் திருமணம் பற்றி பேசியபோது, அதனை நிராகரித்ததுடன், இதுபோன்ற பல்வேறு இளம்பெண்களுடன் தனக்கு தொடர்பு உள்ளது என கூறி விட்டார். 

மேலும் போலீசில் புகார் எதுவும் தெரிவிக்க கூடாது என்றும், மீறினால் தனது ஆபாச புகைப்படங்களை பரப்பி விடுவேன் என மிரட்டினார் என்று புகாரில் தெரிவித்து உள்ளார். இதனை அடுத்து ராக்கி சாவந்த்தின் கணவர் மீது 376, 417,420, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement