• Jul 26 2025

கியாரா அத்வானி கழுத்தில் உள்ள தாலி... எத்தனை கோடி தெரியுமா.. வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில், சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் கியாரா அத்வானி. தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், Shershaah என்கிற படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.


இந்த நிலையில்  சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் சூர்யகார் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டனர்.இந்தத் திருமணத்தில் குடும்பத்தார்,பிரபலங்கள் என்று ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.


கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் இருவரும் திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக பொது இடத்திற்கு வந்த போட்டோ மற்றும் வீடியோ என்பன வைரலாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மற்றோர் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது அந்த புகைப்படங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்றால் அது கியாரா அத்வானியின் தாலி தான்.


அந்த தாலியின் உடைய விலை 2 கோடி ருபாய் என்ற தகவல் தான் தற்போது வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாது இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகவும் மாறி இருக்கிறது,

Advertisement

Advertisement