• Jul 25 2025

' எனக்கு நீ... உனக்கு நான்.. ' தினேஷின் பிக்பாஸ் எண்ட்ரிக்கு பின் ரட்சிதா போட்ட எமோஷனல் பதிவு!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

'பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான்  நடிகை ரச்சிதா. அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். 

எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் தற்போது பிரிந்துள்ளனர். ஆனால் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.

கன்னடத்தில் படம் ஒன்றை நடித்து வருகிறார் ரச்சிதா.. குறித்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் காட்டப்படுகிறார். 


அதேவேளை, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7இல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் தினேஷ்.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் தினேஷ் எண்ட்ரிக்கு பின்னர் நடிகை ரச்சிதா. போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

குறித்த பதிவில், ' உனக்கு நான்... எனக்கு நீ...' என சமீபத்தில் உயிரிழந்த தனது தந்தையின் போட்டோ முன் தாயுடன் அவர் கைகோர்த்து நின்ற  புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதேவேளை,  இதன்மூலம் தினேஷுக்கு தன் வாழ்க்கையில் இடமில்லை என்பதை ரட்சிதா சூசகமாக கூறி உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement