• Jul 25 2025

பிக்பாஸ் வீட்டிற்குள் முகமூடி அணிந்து போட்டியிட்ட ரக்ஷிதா- நெட்டிசன்களுக்கு எதிர்பாராத அசத்தல் பதிலடி!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்த ஒரு முக்கிய ப்ரைம் டைம் சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இதில் ஹீரோயினாக நடித்தவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி. இதில் இவர் பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பொண்ணாக நடித்து கலக்கியிருந்தார். இதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்து அசத்தி வந்தார்.

இந்த நிலையில் இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக கலந்து கொண்டு 90 நாட்களை தாண்டி ஸ்ட்ராங்கான போட்டியாளராக இருந்து வந்தார். அதில் இவர் எல்லோரிடமும் அன்பாக பேசி வந்ததை பார்த்த நெட்டிசன்கள் சிலர், இவர் அந்த வீட்டிற்குள் முகமூடி அணிந்தது போல் எல்லாரிடமும் நடந்து வருவதாக பரவலான தகவலை பரப்பி வந்தனர். இந்நிலையில் இவர் தற்போது முதன் முதலாக உலகநாயகன் அவர்களுடன் மேடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் .

மேலும் தன வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என பதிவிட்டுள்ளார். அதுபோக யாரும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் கதை தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேச வேண்டாம். மேலும் ஒருவரை பற்றி முழுமையாக தெரியாமல் அவரை எந்த விதத்திலும் ஜட்ஜ் பண்ண வேண்டாம். முடிந்த அளவுக்கு பாசிட்டிவிட்டியை மட்டும் பகிந்துகொள்ளுங்க என பேசியுள்ளார். 

இவரின் இந்த பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement