• Jul 25 2025

காதலரை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்.. அடேங்கப்பா இவரா..குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 என்ஜிகே, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலர் ஜாக்கி பக்னானியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார்.கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் காதலர் ஜாக்கி பக்னானியின் பிறந்தநாள் என டபுள் சந்தோஷத்தில் கொண்டாட்ட மூடில் உள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி  என பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து வருவதை அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றார்கள்.


கன்னட திரையுலகில் வெளியான கில்லி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கில் கெரட்டம் மற்றும் யுவன் உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தமிழில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அத்தோடு  கடந்த 10 ஆண்டுகளாக ரகுல் ப்ரீத் சிங் செம க்யூட்டாக நடித்து வருகிறார். புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒண்ணு, தேவ், என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் தமிழில் இந்தியன் 2 மற்றும் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். ஆனால், அந்த இரு படங்களும் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் உருவாகி வருகின்றன.மேலும்  இந்தியில் தற்போது முழு கவனத்தை செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட் நடிகருடன் காதல் வலையில் விழுந்துள்ளார்.


அத்தோடு யங்கிஸ்தான், மித்ரோன், கணபத் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஜாக்கி பக்னானியைத் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங் காதலித்து வருகிறார் என்பதை அதிரடியாக அறிவித்துள்ளார். டிசம்பர் 25ம் தேதி தனது 38வது பிறந்தநாளை ஜாக்கி பக்னானி கொண்டாடி வரும் நிலையில், தனது காதலை செம அழகாக வெளிப்படுத்தி உள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

என் வாழ்க்கைக்கு சான்ட்டா கொடுத்த மிகப்பெரிய கிஃப்ட் இவர் தான் என தனது காதலர் ஜாக்கி பக்னானியை அறிமுகப்படுத்தி உள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். பாலிவுட் திரையுலகில் தயாரிப்பாளராக வலம் வரும் ஜாக்கி பக்னானியை ரகுல் ப்ரீத் சிங் காதலிப்பதை அறிந்த பாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இருவரையும் வாழ்த்தி வருகின்றனர்.


பாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்த ஆண்டு ஏகப்பட்ட நடிகைகள் திருமணம் செய்து கொண்ட நிலையில், அடுத்த ஆண்டு ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானிக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.அத்தோடு  விரைவில் இந்தியன் 2 மற்றும் அயலான் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளன.


Advertisement

Advertisement