• Jul 25 2025

Good Touch.. Bad Touch லாம் வேணாம்.. Don't Touch தான் ஒரே தேர்வு- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தனலக்ஷ்மி

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது அதன் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றது. அந்த வகையில் 77ம் நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

கமல் சேர் எப்பிஷோட் என்பதால் வந்தவுடனேயே ஹவுஸ்மேட்ஸிற்கு ஒரு டாஸ்க் கொடுத்தார்.அதாவது அனைவரையும் குழந்தைகளாக பேச வைத்தார். அதனைத் தொடர்ந்து கடிதம் டாஸ்க் குறித்து பேசினார். அதில் விக்ரமன் அம்பேத்கருக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி கமல் கூறிட்டு இருந்தார்.


அத்தோடு விக்ரமன் அம்பேத்கர் குறித்த பல விடயங்களைப் பகிர்ந்தார். தொடர்ந்து கமல்ஹாசன் தான் காந்தியடிகளுக்கு எழுதிய கடிதத்தை வாசித்துக் காட்டினார். அதன் பின்னர் இந்த வீட்டில் எதை மிஸ் பண்றீங்க என்று கேட்டார்.அதற்கு ஒவ்வொருத்தரும் தம்முடைய கருத்துக்களைக் கூறினார்.

தொடர்ந்து யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று ஹவுஸ்மேட்ஸிடம் கேட்ட போது அனைவரும் அசீம் தான் வெளியேறப்போகின்றார் என்று கூறினார்கள். ஆனால் தனலக்ஷ்மி தான் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் எல்லா டாஸ்க்கினையும் சூப்பராக பண்ணியும் எலிமினேட் ஆகியது தவறானது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில  விவாதித்து வருகின்றனர்.


மேலும் அம்பேத்கர், காந்தி கடிதங்களுக்கு பிறகு கமல் பேசிய இன்னொரு விஷயம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஷிவின் வரைந்த அந்த பள்ளி செல்லும் சின்னஞ்சிறு சிறுமிக்கு கூட பாலியல் பலாத்கார தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு தடைகள் வருவதை வெளிப்படுத்திய ஓவியத்தை வெகுவாக பாராட்டினார்.

குழந்தைகளுக்கு குட் டச் மற்றும் பேட் டச் சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால், அவர்களை தொடும் கைகளுக்கு யார் அதை சொல்லிக் கொடுப்பது என்கிற கேள்வியை எழுப்பிய கமல்ஹாசன் Don't Touch என்பது தான் ஒரே தீர்வாக இருக்க முடியும் என பேசியதும் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் அரங்கில் இருந்த அனைவரும் அவரது கருத்தை வெகுவாக வரவேற்றனர்.


அதே போல கிட்னி ஸ்டோன் பிரச்சனை காரணமாக திடீரென மயங்கி விழுந்த ஏடிகே நிகழ்ச்சி முடிந்ததும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். ஆனால், கமல்ஹாசன் நிகழ்ச்சியின் போது இன்னொரு ஓவியமாக ஏடிகே வரைந்த பல கதவுகள் திறந்து கிடக்கும் ஓவியத்தை பாராட்டி மாணவர்கள் பரிட்சையில் பாஸ் ஆகவில்லை என்பதற்காக சோர்ந்து விடக் கூடாது. பல கதவுகள் உள்ளன என்று கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.இவ்வாறாக தனலக்ஷ்மியின் வெளியேற்றத்துடன் இந்த எப்பிஷோட்டானது முடிவடைந்தது.


Advertisement

Advertisement