• Jul 25 2025

ஒண்ணுமே செய்யாமல் பிக்பாஸ் வீட்டில் பல லட்சம் சம்பளம் வாங்கும் ராம்! எவ்வளவு தெரியுமா?

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. 


தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 6 சீசன் ஒளிப்பரப்பாகி வருகின்றது.பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து,ஷெரினா,அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், என 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த வாரமும் முக்கிய போட்டியாளர்களின் பெயர் எவிக்ஷன் லிஸ்டில் உள்ளது. யார் இந்த வாரம் வெளியேறுவார் என்பதை மக்கள் ஆர்வமாக உள்ளனர். அது கமல்ஹாசன் அவர்களின் கையில் மட்டுமே உள்ளது.


இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராம் சம்பளம் குறித்த தகவல்தான் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் போட்டிகளில் அதிகம் பங்கெடுக்காத மற்றும் விளையாட்டுகளை சுவாரசியம் இல்லாமல் விளையாடி வரும் போட்டியாளராக அறியப்படுபவர் ராம். 

மேலும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் சர்ச்சையில் சிக்கிய ராம், ஒருவழியாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். கிரிக்கெட் வீரரும், மாடலுமான ராமிற்கு பிக்பாஸ் தரப்பில் இருந்து ஒரு நாளைக்கு மட்டும் சம்பளமாக சுமார் 15000 இருந்து 20000 ரூபாய் வரை வழங்கப்பட்டது.


அப்படி பார்த்தால் ராமின் சம்பளம் 63 நாட்களுக்கு, குறைந்தபட்சம் 15 ஆயிரம் வைத்துக் கொண்டால் கூட 15 லட்சத்திற்கும் மேல் சம்பளமாக பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement