• Jul 23 2025

முதன் முதலாக டிவி ஷோவுக்கு வந்த ராமராஜன்- அமுதவாணனுக்கு கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிகழ்ச்சி பல நகைச்சுவை கலைஞர்களை உருவாக்கியிருக்கிறது. அமுதவாணன், வடிவேல் பாலாஜி, சிங்கப்பூர் தீபன், புகழ், பாலா, ராமர், நாஞ்சில் விஜயன், தங்கதுரை போன்ற பல கலைஞர்கள் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து தான் உருவானவர்கள். அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

 இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு முதன்முறையாக நடிகர் ராமராஜன் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார்.எண்பது மற்றும் 90களில் முன்னணி நடிகராக விளங்கிக் கொண்டிருந்தவர் ராமராஜன்.  இவர் தற்போது சாமானியன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராமராஜனுடன் இணைந்து எம்எஸ் பாஸ்கர், ராதாரவி, மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 


சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வித்தியாசமான முறையில் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து விரைவில் படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக ராமராஜன் தற்போது சின்னத்திரைக்குள் வந்திருக்கிறார்.

இங்கு வந்த ராமராஜனிடம் அமுதவாணன் அவரைப் போலவே நடனமாடி காட்டுகிறார். மேலும் நீங்கள் இந்த பாட்டிற்கு எத்தனை முறை நடனமாடி இருப்பீர்கள் என்று ராமராஜனிடம் கேட்கிறார் அவர் ஒரே ஒருமுறைதான் நடனமாடி இருக்கிறேன் என்று பதில் சொல்கிறார் ஆனால் நான் பல இடங்களில் உங்களைப் போல் நடனமாடி பரிசுகளை பெற்று இருக்கிறேன் என்று சொல்ல நெகிழ்ந்து போன ராமராஜன் தன் கையில் இருந்த தங்க மோதிரத்தை கழட்டி அமுதமாணனுக்கு அணிவிக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.

Advertisement

Advertisement